தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வரும் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் தற்போது அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே அப்போது சினிமா நடிகர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அவ்வகையில் நடிகர்கள் தங்கள் உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு கொடுக்கும் சம்பள விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்த் உதவியாளருக்கு ஒரு நாளைக்கு 75 ஆயிரம் சம்பளம், தனுஷ் ஐம்பதாயிரம் ரூபாய், சிம்பு 80 ஆயிரம் ரூபாய், சமுத்திரகனி 35 ஆயிரம், அதர்வா 27 ஆயிரம், சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன் மற்றும் விஷால் ஆகியோர் 15 ஆயிரம் வரை கொடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் வலிமை படம் வரை அஜித் உதவியாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.