Categories
உலக செய்திகள்

அம்மாடியோ….! எவ்வளோ நீளமான காது….. “50 செ.மீட்டர் நீளம்”….. கின்னஸ் சாதனை படைத்த வித்தியாசமான ஆட்டுக்குட்டி…..!!!!

பாகிஸ்தானில் ஒரு ஆட்டுக்குட்டி 50 சென்டிமீட்டர் நீளம் கொண்ட காதுகளுடன் பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது ஹசன் நரிஜோ, என்பவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அவரது பண்ணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு ஆட்டு குட்டி குட்டி போட்டது. அந்த ஆட்டுக்குட்டிக்கு காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதுகளை விட மிகவும் நீளமாக இருந்ததை கண்ட உரிமையாளர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். மேலும் அந்த ஆட்டுக்குட்டிக்கு சம்பா என பெயரிட்ட முகம்மது ஆட்டுக்குட்டியின் காது எவ்வளவு நீளமாக உள்ளது என்பதை அளவு எடுத்தார்.

அதில் ஒவ்வொரு காதும் 19 இஞ்ச் நீளமாக இருந்தது. அதாவது 50 சென்டிமீட்டர் நீளம் இருந்தது. பிறந்து இரண்டு வாரங்களை ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளம் காது இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதனை பார்ப்பதற்கு அங்கு குவிந்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதன்பிறகு நீண்ட காதுகளைக் கொண்ட ஆட்டுக்குட்டி என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

Categories

Tech |