உலகப் புகழ்பெற்ற சிப்ஸ் நிறுவனமான டோரிட்டோ சிப்ஸ் ஒன்று உப்பி இருந்ததை கண்டு, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டைச் சேர்ந்த பதின்மூன்று வயது ரைலி. இந்த சிப்பின் வீடியோவை சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அது விரைவில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
அதற்கு கிடைத்த ஆதரவை பார்த்த ரைலி அந்தச் சிப்ஸை இ-பே வலைதளத்தில் ஏலம் விட்டுள்ளார். அவருக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் ஏலத்திற்கு விட்ட 8 மணி நேரத்தில் 44 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. நம்புவோமா இல்லையோ, ஒவ்வொரு நிமிடமும் ஏலம் அதிகரித்து வருகிறது. எனவே மக்களே அடுத்த முறை சாப்பிடும் போதும் கவனமாக இருங்கள். உங்களுக்கு கூட இந்த வாய்ப்பு கிடைக்கலாம்.