மும்பை விமான நிலையத்தில் சூடான டீ மற்றும் இரண்டு சமோசாக்கள் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக ஒரு நபர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு ஒரு வேலையில் எவ்வளவு பழு இருந்தாலும் சூடான டீ மற்றும் சமோசாவை சாப்பிட்டால் அந்த நாளே அழகானதாக மாறிவிடும். ஆனாலும் இந்த டீயும், சமோசாவும் தற்போது துயரத்தை கொடுத்திருப்பதாக பராஹ் கான் என்ற நபர் ட்விட்டரில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
அந்த நபர் மும்பை விமான நிலையத்தில் நான் ஒரு டீ மற்றும் 2 சமோசா, ஒரு குடிநீர் பாட்டில் போன்றவற்றை ரூபாய் 490 கொடுத்து வாங்கினேன். இதில் 2 சமோசாக்களின் விலை 260 என்றும், டீயின் விலை 160 என்றும் அந்த நபர் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு பலரும் ரீட்வீட் செய்து வருகிறார்கள்.
https://twitter.com/farah17khan/status/1607980557333417984?s=20&t=CjRSp3YtjP2k0n1E_O7Byg