துபாயின் அரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் சமயத்தில் உலகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதன்படி இந்த வருடமும் உலகம் முழுவதும் உள்ள 100 கோடி மக்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை செயல்படுத்த நிதி திரட்டும் நோக்கில் வாகன உரிமைகளுக்கான பிரத்தியேக ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்திற்காக வரவழைக்கப்பட்ட பல நம்பர் பிளேட்டுகள் கோடிக்கணக்கில் ஏலம் போனது. அந்த வகையில் AA8 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட் 35 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்புக்கு ரூ.73 கோடி ஆகும்.
Categories