Categories
உலக செய்திகள்

அம்மாடியோ… “ஒரு பாட்டில் விஸ்கி ரூ1 கோடியா”…? அப்படி என்ன ஸ்பெஷல் இதுல… படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!!

உலகின் பழமையான விஸ்கி ஒரு கோடிக்கு ஏலம் போயுள்ளது. சுமார் 250 ஆண்டுகளுக்கு பழமையான விஸ்கி குறித்து இதில் பார்ப்போம்.

உலகிலேயே மிகப் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று ஒரு கோடிக்கு ஏலம் போயுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பழங்கால பொருட்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பழைய பொருட்களை ஏலத்தில் விடும்பொழுது உனக்கு எனக்கு எனப் போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தில் வாங்குவது பழக்கமாகிவிட்டது. அதுபோன்றுதான் தற்போது உலகின் பழமையான விஸ்கி பாட்டிலாக கருதப்படும் என்ற ஒல்டு இங்லீடோ என்ற விஸ்கி பாட்டில் 1860ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அப்போது அதில் பழமையான விஸ்கியை சேமித்து வைத்துள்ளனர். அந்த விஸ்கி பயப்படுவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே தயார் செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இந்த பாட்டில் ஸ்கின்னர் என்ற ஏல நிறுவனத்தில் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாடல் 20,000 முதல் 40,000 வரை ஏலம் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பாட்டிலை மார்கன் லைப்ரேரி மியூசிம் மற்றும் ஆய்வகம் 1.37 லட்சம் அமெரிக்கா டாலருக்கு விற்பனைக்கு வாங்கியுள்ளது. இதன் இந்திய மதிப்பு 1.02 கோடி ஆகும். உலக பிரபலமான பணக்காரரிடம் இந்த பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த விஸ்கி தயாரித்து குறைந்தது 250 ஆண்டுகள் இருக்கும். ஆனாலும் இந்த விஸ்கி தற்போது குடிக்கும் நிலையில்தான் உள்ளது. இது 53 சதவீத ஆல்ஹாலுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |