தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது. பின்னர் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதாவது ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு அம்மா ரோல்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 திரைப்படத்தில் ராஜமாதாவாக நடித்து அசத்தியிருப்பார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு நல்ல வரவேற்பு பெற்றது. இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவ்வப்போது போட்டோ சூட் எடுப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் போட்டோ சூட் ஒன்று நடத்தியுள்ளார். அதில் அவர் அணிந்திருந்த புடவை பலரது கண்ணை ஈர்த்துள்ளது. காரணம் அந்த புடவையின் விலை சுமார் 1.25 லட்சம். இவ்வளவு விலையுள்ள அந்த புடவை ரூபி ரெட் எம்ராய்டரி ஜார்ஜெட் புடவை ஆகும். இது தூய பட்டு வெல்வெட் மற்றும் தூய பருத்திப்பட்டு எம்ராய்டரி டிசைன் கொண்டு செய்யப்பட்டது. இந்த புடவை தான் பலரும் ஆன்லைனில் தேடி வருகின்றனர். இந்நிலையில் இவரின் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.