பெரிய சூப்பர் மார்க்கெட் மற்றும் மால்களில் பொருட்களின் விற்பனை விலை 999, 499 என குறிப்பிடப்பட்டிருக்கும். பெரும்பாலும் 9 என்ற எண்ணில் அமையுமாறு விலை நிர்ணயம் செய்து வைத்திருப்பர். இதன் பின்னணியில் மிகப் பெரும் லாபம் ஒளிந்திருக்கிறது. சுலபமாக 100,200 என வைக்காமல் ஒரு ரூபாய் விலை குறைத்து வைப்பதற்கான காரணம் தெரியுமா.?
முதல் காரணம் உளவியல் ரீதியானது ஆகும். 999 ரூபாய் என்பது வாடிக்கையாளருக்கு விலை குறைவு என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். 1 ரூபாய் குறைப்பதால் 900 ரூபாய் என்பது போன்ற உணர்வு ஏற்படும். உளவியல் ரீதியாக 39,999 ரூபாய்க்கு வாங்கும் எல்.இடி டி.வியை நாம் 30,000 ரூபாய்க்கு வாங்குவது போல உணர்வை ஏற்படுத்தும். இரண்டாவது காரணம் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மீதமுள்ள அந்த ஒரு ரூபாயை கேட்க மாட்டார்கள். மேலும் சில வியாபாரிகள் சில்லறை இல்லை என கூறி சமாளித்து விடுவார்கள்.
பிரபல சூப்பர் மார்கெட்டிற்கு ஒரு நாளைக்கு வரும் 500 வாடிக்கையாளர்கள் மீதமுள்ள ஒரு ரூபாயை வாங்காமல் சென்றால் ஒரு நாளைக்கு 500 ரூபாய் லாபமும், ஒரு வருடத்திற்கு 1,82,500 ரூபாய் லாபமும் கிடைக்கும். இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட் உள்ளது. அவற்றை கணக்கெடுத்தால் வருடத்திற்கு 90 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. இந்த ரூபாய் கணக்கில் வராமல் உரிமையாளருக்கு வரும் கருப்பு பணம் ஆகும். நுகர்வோர் சில்லரை 1 ரூபாய் பெரிய விஷயம் இல்லை என அதனை வாங்காமல் செல்கின்றனர். இதற்கு தீர்வாக பில் தொகையை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் செலுத்தினால் இந்த கருப்பு பணம் உருவாகாது என்பதை அனைவரும் நினைவில் வைத்து கொள்வோம்.