முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவருக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் நேற்று மீண்டும் எஸ். பி வேலுமணியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். வீடு அலுவலகம் உட்பட எஸ்.பி வேலுமணி சொந்தமான 59 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எஸ். பி வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விபரத்தை வெளியிட்டுள்ளனர். அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் 11.153 கிலோ கிராம் தங்க நகைகள், 118.506 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத பணம் ரூ.84,00,000/-, சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் சுமார் ரூ.34,00,000/- அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.