Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… சிங்கிள் கப் டீ விலை ரூ.1000… அப்படி என்ன ஸ்பெஷல் இதுல… எங்க இருக்கு…? வாங்க பார்ப்போம்…!!!

ஹைதராபாத்தில் ஒரு நடுத்தர டீ கடையில், ஒரு கப் டீ யின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்கள் டீ, காபி போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வது வழக்கம். ஆனால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு நடுத்தர ஓட்டல் ஒன்றில் ஒரு கப் டீ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் எப்போதும் விதவிதமான டீ விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் டீக்கடை மிகவும் பிரபலமானது. பல கிளைகள் கொண்ட இந்த டீக்கடையில் விதவிதமான டீ, பிஸ்கட் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த டீ கடையின் உரிமையாளர் சமீபத்தில் பணக்காரர்கள் அதிகமாக வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் தங்களது புது கிளையை திறந்துள்ளார். இங்கு ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அப்படி என்ன இதில் ஸ்பெஷலாக இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்கே பலரும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து டீ குடித்து விட்டு செல்கின்றனர். இதுகுறித்து அந்த ஓட்டலின் உரிமையாளர் கூறும்பொழுது: “கோல்டன் டிப்ஸ் பிளாக் டீ” என்ற டீத்தூள் அசாம் மாநிலத்தில் ஏலம் விடப்பட்டது. இதனை ஒரு கிலோ 75 ஆயிரம் ரூபாய் கொடுத்து நாங்கள் ஏலத்தில் எடுத்தோம். இது உயர் வகை டீ தூள், அதுமட்டுமில்லாமல் மிகவும் அரிதானதும் கூட, இதனால் இந்த டீ தூள் கொண்டு தயாரிக்கப்படும் டீயை நாங்கள் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதை குடித்தவர்கள் மிகவும் நன்றாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்” என்று கூறினார்

Categories

Tech |