Categories
சினிமா

அம்மாடியோ….. நான்கே நாட்களில் இத்தனை கோடியா?…. வசூல் வேட்டையில் திருச்சிற்றம்பலம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலும் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. தற்போது தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இந்தத் திரைப்படம் அண்மையில்  திரையரங்குகளில் வெளியானது.  இப்படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் நடிகர் பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்ப படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓ பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது.இந்தத் திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் நான்கு நாட்களிலேயே 10 கோடி கூடுதல் வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இந்த வசூல் மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |