தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் நாளைக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தியில், சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபதாரம் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 8 நாட்களில் முகக்கவசம் அணியாத 2682 நபர்களிடமிருந்து ரூ.13, 41,000 அபதாரமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 ஆம் தேதியில் மட்டும் 342 நபர்களிடமிருந்து ரூ.1,71,000 அபதாரமாக மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.