Categories
சினிமா

அம்மாடியோ மூன்றே நாளில் இத்தனை கோடியா?….. வசூல் வேட்டையில் சக்க போடு போடும் பொன்னியின் செல்வன்….!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 230 கோடி வசூல் செய்துள்ளது.காலாண்டு விடுமுறை மற்றும் விழாக்கால விடுமுறை என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் இந்த வார இறுதியில் 400 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்கா,மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

Categories

Tech |