Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. ரூ.25 கோடியா….? ஷாருக்கானின் மகனை விடுவிக்க பேரம்…. சாட்சி அளித்த பேட்டியால் பரபரப்பு….!!!

ஷாருக்கான் மகன், ஆர்யன் கானை விடுவிப்பதற்கு 25 கோடி பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆரியன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பல முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த போதும் நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தற்போது தாக்கல் செய்த ஜாமீன் மனு மும்பை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து ஆரியன் கானை விடுவிப்பதற்கு 25 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் போது சாட்சியான பிரபாகர் சாயில் என்பவர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். இந்த வழக்கின் சாட்சியான கோசாவி என்பவரின் மெய்க்காவலர் ஆவார். கப்பலில் நடைபெற்ற சோதனையின் போது இருவரும் அங்கே இருந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக டிசோசா என்பவரிடம் அவர் பேசும்பொழுது ஆரியன் கானை விடுவிப்பதற்கு ஷாருக்கானிடம் 25 கோடி பேரம் பேசப்பட்டது என்றும், இறுதியில் 18 கோடி வரை பேரம் முடிந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனை டிசோசாவிடம் கோசாவி கூறியதை தான் கேட்டதாக பிரபாகர் சாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்யன் கானை விடுவிப்பதற்கு 25 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்படுவது போதை பொருள் தடுப்பு பிரிவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |