நடிகர் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் அவர் இருந்து வந்தாலும் ட்விட்டரில் கணக்கை தொடங்காமல் இருந்தார்.இந்நிலையில் தனது படங்கள் குறித்து அப்டேட்டுகளை வெளியிடவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காகவும் ட்விட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளார்.
இதனை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ள நிலையில், அவரை நெட்டிசன்கள் மளமளவென பின் தொடர்ந்து வருகின்றனர்.சியான் விக்ரம் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ளார். ரசிகர்கள் அவரை அன்புடன் அழைக்கும் சியான் (@Chiyaan) என்ற யூசர் ஐடியில் விக்ரமின் அக்கவுன்ட் ஓபன் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் கடந்த 12 மணி நேரத்திற்கு முன்பு ட்விட்டரில் அதிகாரபூர்வமாக இணைந்த நிலையில் தற்போது வரை அவரை சுமார் 74.4 k பேர் பின் தொடர்கின்றனர். ஆனால் அவர் யாரையும் பின் தொடரவில்லை.ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கும் விக்ரம் அப்படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் நடிகைகளையும் விரைவில் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அவரையும் பின் தொடரவில்லை.