Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… 120 மொழியில் பாடி… கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனை மாணவி… குவியும் பாராட்டுகள்….!!!

கேரளாவைச் சேர்ந்த மாணவி 120 மொழிகளில் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த சதீஷ் சுமித்ரா தம்பதியின் மகள் சுசேத்தா சதீஷ்(16 வயது). இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகின்றனர். மாணவி சுசேத்தா சதீஷ் துபாயில் உள்ள இந்திய பள்ளியில் படித்து வருகிறார். இளம் வயதிலிருந்தே கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையில் ஆர்வம் உடைய இந்த மாணவியை ஏராளமான மேடைகளில் பாடியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஒரு கலைநிகழ்ச்சி 102 மொழிகளில் பாடியுள்ளார்.

மேலும் ஆறு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பாடி சாதனையும் படைத்துள்ளார்.  கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி இந்திய தூதரக கலை அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் இவர் 122 மொழிகளில் பாடி சாதனை படைத்தார். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. மேலும் அவர் பாடியது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. இது குறித்து அந்த மாணவி கூறுகையில் இளம் வயதிலிருந்தே இசை என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. என்னால் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பாட முடியும். ஜெர்மனி மொழியில் பாடுவது மட்டும் சற்று கடினமாக இருந்தது.  இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |