கர்நாடக மாநிலத்தில் சுமார் 1500 கிலோ எடைகொண்ட திமிங்கலம் ஒன்று மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சாகர் என்பவர் மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பும் போது படகில் மீனவர்கள் வலையை பிரித்து பார்த்த போது ராட்சத திமிங்கலம் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த ராட்சத திமிங்கலம் சுமார் 1500 கிலோ எடை இருக்கும் எனவும், பெரிய அளவு திமிங்கலம் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட மீனவர்கள் பின்னர் அதனை மீண்டும் கடலிலேயே விட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.