Categories
உலக செய்திகள்

அம்மாடியோ…. 2.5 கோடியா…? “ஸ்டீவ் ஜாப்ஸ் வேலை விண்ணப்பம் ஏலம்”…!!!

ஆப்பிள் நிறுவனத்தின் துணைத் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் வேலை விண்ணப்பம் 2.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த வேலை விண்ணப்பம் ஸ்டீவ் ஜாப்ஸால் 1973 ஆம் ஆண்டு, அவரின் 18 வயதில் நிரப்பப்பட்டது ஆகும். இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் அவர் வாழ்க்கையில் இதுவரை எழுதப்பட்ட ஒரே ஒரு வேலை விண்ணப்பம் இது மட்டுமே. ஸ்டீவ் ஜாப்ஸின் வேலை விண்ணப்பம் ஆன்லைன் ஏலத்தின் மூலம் $ 3,43,00 க்கு ஏலம் விடப்பட்டது. இந்த தொகை தோராயமாக ரூ .2,54,95,018.50 என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு விண்ணப்பத்தில் அவரது வேலை, பெயர், முகவரி தொலைபேசி மற்றும் முக்கிய மொழி, ஓட்டுனர் உரிமம், சிறப்பு திறன் ஆகிய ஏராளமான விவரங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த விண்ணப்பம் தற்போது வரை நல்ல நிலையில் இருப்பதாகவும், சில இடங்களில் மட்டும் வெட்டு மற்றும் மடிப்புகள் இருப்பதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |