Categories
தேசிய செய்திகள்

“அம்மாடியோ 206” கடுமையான இடுப்பு வலி…. சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி…!!!!

தெலுங்கானாவின் நலகொண்டா மாவட்டத்தில் வசித்து வருபவர் வீரமல்லா ராமலட்சுமையா (56). இவர் ஐதராபாத் நகரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்று கடந்த 6 மாதங்களாக இடுப்புக்கு சற்று மேலே இடது புறத்தில் கடுமையான வலி உள்ளது என கூறியுள்ளார். இதனால், மருத்துவர்கள் அவரது கடந்தகால மருத்துவ குறிப்புகளை வாங்கி பார்த்துள்ளனர்.

அதில், கடந்த காலங்களில் உள்ளூரில் உள்ள சுகாதார பயிற்சியாளர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சில மருந்துகளை வாங்கி ராமலட்சுமையா சாப்பிட்டுள்ளார். அது குறுகிய காலத்திற்கு நிவாரணம் தந்துள்ளது. ஆனால் தொடர்ந்து வலி ஏற்பட்டு அன்றாட வேலைகளில் பாதிப்பு ஏற்படுத்தியது.

இதன்பின்னர் மருத்துவர்கள் அவருக்கு ஆரம்பகட்ட பரிசோதனையாக அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில், அவரது இடதுபுறம் சிறுநீரக கற்கள் இருந்துள்ளன. இதன்பின்பு ராமலட்சுமையாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சையில் சுமார் 206 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து அவர் உடல்நலம் தேறி அவர் வீடு திரும்பியுள்ளார்.

Categories

Tech |