திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார் நகரில் விநாயகர், மதுரை வீரன், மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளது இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கரக அலங்கரித்து வானவேடிக்கையுடன் கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த விழாவில் வேடசந்தூர் குடகானாற்றியில் இருந்து இரண்டு பக்தர்கள் 21 அடி நீளம் உள்ள வேல் அழகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தனர். இதனையடுத்து பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் விழாவில் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை மஞ்சள் நீராடுடன் அம்மன் கரக பூஞ்சோலை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.