Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… 72 கிலோ சாக்லேட் சிலை… முதல்வரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தீவிர ஆதரவாளர்….!!!

ஒடிசா மாநில முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 72 கிலோவில் சாக்லெட்டுகளை கொண்டு அவரின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தள கட்சி ஆட்சி அமைத்து வருகின்றது. அம்மாநில முதல்வராக நவீன் பட்நாயக் திகழ்கிறார். இவரின் 75-வது பிறந்த நாள் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பிறந்த நாளுக்கு முன்பாகவே நவீன் பட்நாயக் தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த நிலையில், பிஜூ ஜனதா தள சமூக சேவை அணியின் சார்பில் அவரின் பிறந்தநாள் தினத்தன்று ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 5000 பேர் ரத்ததானம் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் குர்தா மாவட்டம் பெகுனியா பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் நவீன் பட்நாயக் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் ஒரு பேக்கரி நடத்தி வருகிறார். இவர் நவீன் பட்நாயக்கின் பிறந்த நாளுக்காக எழுபத்து இரண்டு கிலோ சாக்லேட்டை அவர் உருவத்தில் உருவாக்கினார். இதை புவனேஷ்வர் கலிங்கா ஹாக்கி ஸ்டேடியத்தில் வைத்து அம்மாநில விளையாட்டு துறை அமைச்சர் டிகே பெஹ்ரா என்பவர் திறந்து வைத்தார்.

இந்த கேக்கில் நவீன் பட்நாயக்கின் உருவம் மட்டுமல்லாமல் இந்த கேக்கை தயார் செய்வதற்கு ஸ்பான்சர் செய்த ஹாக்கி அணியின் தீம் இதில் பயன்படுத்தப்பட்டது. மேலும் அவர்கள் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் அதுவும் இந்த கேக்கில் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து பேக்கரியின் உரிமையாளர் ராகேஷ் குமார் கூறியதாவது: நான் தனது பேக்கரியில் பயிலும் 7 மாணவர்களின் உதவியுடன் இந்த சிற்பத்தை 15 நாட்கள் செலவு செய்து வடிவமைத்தேன் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |