இந்தோனேஷியாவில் 7200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்ணின் மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தெற்கு சுலாவேசி என்ற பகுதியில் ஆய்வுகளை நடத்தி வந்துள்ளனர். இதற்கான முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர். தெற்கு சுலாவேசி என்ற பகுதியின் முதல் நாகரீகமாக டோலியன் மக்கள் கருதப்படுகின்றனர். அப்பகுதியில் ஒரு சுண்ணாம்பு குகையில் கண்டு எடுக்கப்பட்ட 17 அல்லது 18 வயதுடைய இளம் பெண்ணின் எலும்புகள் தற்போது வரை சேதமாகாமல் இருந்துள்ளது. வேட்டையாடி வாழும் அப்பெண்ணின் சடலத்தில், வயிற்றில் ஒரு குழந்தை படுத்திருப்பது போன்று காணப்படுகின்றது.
இதனால் அப்பெண் கர்ப்பமாக இருக்கும் பொழுது உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அந்தப்பெண்ணை ஆராய்ச்சியாளர்கள் பெஸ்கி என்ற பெயருடன் அலைகின்றனர். மேலும் பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மரபணு கண்டறியப்பட்டுள்ளது. உலகில் வேறு எந்த பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்படாத புதிய மரபணு இதுவாகும். ஈரப்பதமான, வெப்பமண்டல வானிலையில் டிஎன்ஏ-க்கள் எளிதாக அழிந்துவிடும். இருப்பினும் இந்த டிஎன்ஏ-க்கள் அழியாமல் கிட்டத்தட்ட 7,200 ஆண்டுகள் வரை அப்படியே இருந்துள்ளது மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகின்றது. இது குறித்து கூடுதல் ஆராய்ச்சி செய்த பிறகே தெளிவான முடிவுகள் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.