Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…! 9 லட்சத்தில் கம்மல்… இப்ப மூன்றடுக்கில் வீடு..! கலக்கும் பிரபல சீரியல் நடிகை…!!!!!

நடிகை ஹேமா ராஜ்குமார் மூன்றடுக்கு வீடு கட்டுகின்றார்.

வெள்ளிதிரையை போன்று  சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் மிகவும் பிரபலமாகி வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகர்கள் பொருளாதாரஅளவிலும் நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றார்கள். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகை  ஹேமா மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு வைர கம்மலை வாங்கினார். அதன்மதிப்பு சுமார் 9 லட்சம் ரூபாய் ஆகும். இந்த நிலையில் இவர் சீரியல் மட்டுமல்லாமல் யூட்யூப் மூலமாக பல லட்சங்கள் சம்பாதித்து வருகின்றார். இந்த நிலையில் மிகப்பெரிய தொகையை செலவழித்து ஒரு பெரிய வீட்டை கட்டியுள்ளார். அவர் பகிருந்த யூடியூப் வீடியோவில் தான் சென்ற ஒரு வருடமாக புதிய வீடு ஒன்றை கட்டி வருவதாகவும் அது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாகவும் கூறி ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ளார். விரைவில் வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |