விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அதில் அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜு டைட்டில் வின்னராகவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பிடித்தார்கள். இந்நிலையில் இவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ராஜுவுக்கு 50 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா 28 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமீருக்கு 25 லட்சமும், பாவனிக்கு 20 லட்சமும், நிரூப்புக்கு 11 லட்சமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜனவரி 30-ஆம் தேதி துவங்குகிறது. நடந்து முடிந்த 5சீசனில் கலந்து கொண்டவர்கள் இதில் மீண்டும் பங்கேற்க உள்ளனர்.