டெல்லியைச் சேர்ந்தவர் சாய்னா(29). இவர் ஏற்கனவே முதல் இரண்டு கணவர்கள் பிரிந்து சென்ற நிலையில் மூன்றாவதாக போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஷேக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து அவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறை சென்றதால் நான்காவதாக வசீம் என்ற நபரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் வசீம் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது சாய்னாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சாய்னா இதை தட்டிக் கேட்டு அடிக்கடி தொல்லை செய்ததால் வசீம் சாய்னாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் சிசிடிவியில் பதிவானதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.