பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அந்நாட்டில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கடந்த வாரம் முதல் விவசாய உற்பத்திக்கு 17% பொது வரியை அமல்படுத்தியது. அதன் காரணமாக தற்போது பாகிஸ்தானில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கராச்சி நகரில் ஒரு லிட்டர் பாலின் விலை பாகிஸ்தான் கரன்சியில் 60 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் ரூ. 86.03 ஆகும். ஆனால் தற்போது கராச்சியில் ஒரு லிட்டர் பாலின் விலை பாகிஸ்தான் கரன்சியில் ரூ. 140- க்கு விற்பனையாகி வருகிறது. அரசு நிர்ணயித்துள்ள தொகையை காட்டிலும் இது 20 ரூபாய் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் தொடர்பாக பால் மற்றும் கால்நடை விவசாய சங்கத்தின் தலைவர் ஷகீர் உமர் குஜ்ஜார் பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தங்களுக்கு 17 சதவிகித வரியிலிருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.