4 பவுன் நகை மோசடி செய்ததாக ஐ.டி நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சவுரிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்த தனது தாய் தந்தையருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெங்களூரைச் சேர்ந்த ஆண்டனி என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இருவரும் பேசி வந்த நிலையில் விடுதி ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அப்போது ஆண்டனி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை மருத்துவச் செலவிற்கும் பணம் இல்லை என்று கூறியதை நம்பி அந்தப் பெண் தான் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைக் கழட்டி கொடுத்துள்ளார். பின்பு மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து விட்டு வருவதாகக் கூறி சென்ற ஆண்டனி வெகு நேரமாகியும் வராததால் அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றபட்டத்தை உணர்ந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிந்து ஆண்டனியை வலை வீசிதேடி வருகின்றனர்.