மகன் கீழே தள்ளிவிட்டதால் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பாடி அவ்வை நகர் பெரியார் தெருவில் சுந்தர மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சங்கர் என்ற மகன் உள்ளார். கடந்த 12-ஆம் தேதி மது குடிப்பதற்கு பணம் தருமாறு சங்கர் ராணியிடம் தகராறு செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி தனது மகனை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சங்கர் சுந்தரமூர்த்தியை வேகமாக கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கீழே விழுந்து படுகாயமடைந்த சுந்தரமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுந்தரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.