அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் கலவரத்தில் நடந்து முடிந்தது. எடுத்து வருகின்ற ஜூலை 11ம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அதிமுகவில் இந்த அசாதாரண சூழல் யாரால் ஏற்பட்டதோ அவர்களுக்கு மக்களே கூடிய விரைவில் உரிய தண்டனை வழங்குவார்கள். கட்சியில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்குக் காரணம் என்று எனக்கு தெரியும். ஓபிஎஸ் போன்ற ஒரு தூய தண்டனை பெற்றது நான் செய்த பாக்கியம் என்று ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார். இதைவிட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
Categories