மோட்டர் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுதிள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்துவிட்டு அக்கா வீட்டில் இருக்கும் தனது அம்மாவை அழைப்பதற்காக வினோத் குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் வினோத்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த வினோத் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.