Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அம்மா….! அவர் என்னை அடிக்கிறார்” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. தாயின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அந்தோணிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லிபிபியர்ஸ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடன் சுமையால் அவதிப்பட்ட அந்தோணி ராஜ் லிபிபியர்ஸிடம் உனது தாயிடம் பணம் கேள் எனக் கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து லிபிபியர்ஸ் தனது தாய் ஜெயசீலியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

அதன்பின் லிபிபியர்ஸ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜெயசீலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |