Categories
மாநில செய்திகள்

அம்மா இருசக்கர வாகன திட்டம்… இளம்பெண்களுக்கு முன்னுரிமை… அரசு அறிவிப்பு…!!!

அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பெண்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியீட்டுள்ளது. அதன்படி பெண்கள் அனைவரும் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் இருசக்கர வாகனம் வாங்க அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இந்த வருடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் மகளிர்கள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர்கள், சுயதொழில், வியாபாரம், இதர பணிகள் மேற்கொள்ளும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள் செயல்படுத்துவோர் பெறலாம்.

மேலும் சமுதாய நல அமைப்பாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள், மாவட்ட மக்கள் கற்றல் மையங்களில் பணிபுரியும் மகளிர்கள் ஆகியோர் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்கள் வாங்கும் இரண்டு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் தொகை மானியமாக வழங்கப்படும். மேலும் 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் தேவையான சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |