Categories
மாநில செய்திகள்

அம்மா இருசக்கர வாகன திட்டம்… “வரும் ஆனா வராது”… பெரியகருப்பன் பதில்…!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது அம்மா இரு சக்கர வாகனம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் விண்ணப்பித்து, தகுதியானவர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனால் இந்தத் திட்டம் தற்போது தொடர்ந்து செயல்படுமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்தவகையில் அம்மா இருசக்கர வாகன திட்டம் தொடருமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நிதி நிலையை பொறுத்து முதல்வர் முடிவு செய்வார் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீது எங்களுக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்றும் அவர் பதிலளித்துள்ளார். ஆக மொத்தம் இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |