Categories
அரசியல்

அம்மா உணவகங்களில் இனி இலவச உணவு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அம்மா உணவகம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தால் தொடருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அம்மா உணவகம் அதே பெயரில் இயங்கும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்தவர்கள் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க நிதி அளிக்க உள்ளனர். கோவை மண்டலத்தில் உள்ள 12 உணவகங்கள், வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய 15 உணவகங்களில் ஊரடங்கு காரணமாக இலவசமாக உணவு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு 52.5லட்சம் ரூபாய் வழங்கப்படும் என திமுக அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |