Categories
சென்னை மாநில செய்திகள்

“அம்மா உணவகங்களில் இனி சப்பாத்தி இல்லை”?…. சென்னை மாநகராட்சி அதிகாரி முக்கிய தகவல்….!!!

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை தொடர்பாக மாநகராட்சி அதிகாரி வெளியிட்ட செய்தியில்,சென்னையில் உள்ள 400 அம்மா உணவகங்களில் வழக்கம் போல உணவுகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோதுமை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டதால் சப்பாத்தி தயாரிப்பது தற்காலிகமாக தடைப்பட்டது. அதன் பிறகு பிரச்சனை சரி செய்யப்பட்டு மீண்டும் சப்பாத்திகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சப்பாத்தி மாவு மிஷின் ரிப்பேர் ஆனது, அதையும் சரி செய்து தடையின்றி சப்பாத்தி வழங்கப்பட்டு வருகிறது.எனவே அம்மா உணவகங்களில் சப்பாத்தி நிறுத்தும் எண்ணம் அரசுக்கு எதுவும் கிடையாது. சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். இதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.அம்மா உணவகங்களை கண்காணிக்கவும் தரமான உணவு வழங்குவதற்காக மாநகராட்சியில் தனியாக ஒரு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை அவர் கண்காணித்து வருகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |