தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்கள் மற்றும் மாநகராட்சி சமையல் கூடங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அம்மா உணவகங்களில் இன்று முதல் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.