தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 2 நாட்களாக கன மழை வெளுத்து வாங்குகிறது.அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளார் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்காக சென்னை முழுவதும் உள்ள 20 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்தும் ஒரு வேளைக்கு 1.5 லட்சம் பேர் சாப்பிடும் அளவுக்கு உணவு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் இலவச உணவு வழங்க வசதியாக அம்மா உணவக ஊழியர்கள் மூன்று வேளையும் பணிக்கு வந்து உணவு பரிமாறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மொத்தமுள்ள 403 அம்மா உணவகங்களும் முழுநேரமும் செயல்பட வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.