சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ளது. இந்த உணவங்களால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால் இங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் சிற்றுண்டி தயாரித்து பள்ளிகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன .தமிழக அரசு அனுமதி கொடுத்தால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு இங்கிருந்து சமைத்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.