Categories
சென்னை மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் இரவு நேர உணவு நிறுத்தம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகம் முழுவதிலும் அம்மா உணவகம் தொடங்க உத்தரவிட்டார். மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு கலவை சாதங்கள் மற்றும் இரவில் 3 ரூபாய்க்கு சப்பாத்தி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களுக்கு அம்மா உணவகம் முன்மாதிரியாக விளங்குகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அம்மா உணவகம் கைவிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் அதனை தொடருமாறு அறிவித்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கொரோனா காலத்திலும் ஏழை எளிய மக்களின் பசியை போக்கியது அம்மா உணவகம். தற்போது கூட்டம் குறைந்து வருவதால் அம்மா உணவகத்தில் குறைந்த அளவில் உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் நிதி நெருக்கடி காரணமாக அம்மா உணவகத்தில் இரவு நேரங்களில் விற்பனை செய்யப்பட்ட சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சப்பாத்திக்கு தேவைப்படும் கோதுமை விநியோகம் செய்யப்படாததால் சப்பாத்தி நிறுத்தப்பட்டு இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் சப்பாத்திக்கு பதிலாக தக்காளி சாதம் இரவு நேரங்களில் வழங்கப்படுகிறது. வழக்கம் போல காலையில் இட்லி, மதியம் சாம்பார், தயிர் மற்றும் எலுமிச்சை சாதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Categories

Tech |