மதுரையில் அம்மா உணவக பேனரில் கருணாநிதி படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் உள்ள அம்மா உணவகத்தில் பேனரில் கருணாநிதி படம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துவிட்டு திமுக பிரமுகருக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தியதாக சமீபத்தில் புகார் எழுந்தது.
இந்த சூழலில் இந்த உணவகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி படம் பொறிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அம்மா உணவகத்தில் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.