அம்மா உணவகத்தை திமுகவினர் மீண்டும் சரிசெய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வந்தது.
https://www.youtube.com/watch?v=192mJlGPkks
இதையடுத்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு க ஸ்டாலின் தெரிவித்தார். திமுகவினர் ஆட்சிக்கு வந்த உடனேயே அம்மா உணவகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது திமுகவினர் அதை சரி செய்யும் வீடியோவும் வெளியாகியுள்ளது.