Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மா உணவகம்… பசி தீரும் மக்கள்… அலைமோதும் கூட்டம்… அதிகரிக்கும் வருவாய்…!!!

சென்னையில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அம்மா உணவகங்களில் கூட்டம் அலை மோதுவதால் வருவாய் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னையில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் அந்த உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.அதனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் அம்மா உணவகங்களுக்கு பாத்திரங்களை எடுத்து சென்று மூன்று வேளையும் உணவு வாங்கிச் சென்றனர். அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இலவச உணவு வழங்கப் படுவது நிறுத்தப்பட்டது.அதனால் அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் குறைந்து விற்பனை முற்றிலும் சரிய தொடங்கியது. சரியான வேலை இல்லாத காரணத்தால் கூலித் தொழிலாளிகள் விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் உணவகங்களில் வியாபாரம் அதிகரிக்கத் தொடங்கியது. சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள் திறக்கப்பட்டு இருப்பதாலும், பொது போக்குவரத்து தொடங்கி உள்ளதாலும் மீண்டும் பழைய நிலைக்கே விற்பனை தொடங்கியது. அது மட்டுமன்றி அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் உணவு பொருட்கள் உடனடியாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன. அதனால் வருவாய் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுபற்றி அம்மா உணவக ஊழியர் ஒருவர் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக விற்பனை நன்றாக நடந்து வருகிறது.

மேலும் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அனைத்தும் விற்று விடுகின்றனர். மதிய சாப்பாட்டுக்கு 10 கிலோ அரிசி, இட்லிக்கு 12 கிலோ அரிசி, சப்பாத்திக்கு 10 கிலோ கோதுமை மாவு ஆகியவை தினந்தோறும் பயன்படுத்துகிறோம். இவற்றில் எதுவும் மீதமாகுவதில்லை. கூலித் தொழிலாளர்கள் அதிக பேர் இங்கு வருகிறார்கள். மந்தமான விற்பனையில் இருந்த அம்மா உணவகம் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |