Categories
மாநில செய்திகள்

அம்மா உணவக பெயர் பலகை மீண்டும் மாற்றம்…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…!!!!

மதுரை மாவட்டம் சுந்தரராஜ புரத்தில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் ஜெயலலிதாவின் படத்தோடு கருணாநிதியின் படம் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியது. இதனையடுத்து அந்த பெயர் பலகையை திடீரென மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

எனவே நீண்ட நாட்களாக பெயர்ப்பலகை இன்றி செயல்பட்டு வந்த அந்த அம்மா உணவகத்தில், தற்போது  மீண்டும் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |