Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அம்மா! எனக்கு கல்யாணம் பண்ணி வை” வாலிபர் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சேகர்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தினமும் தனது தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாவித்திரியிடம் சாப்பாடு செய்து வைக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்ற கார்த்திகேயன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கார்த்திகேயனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

அப்போது ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் இருக்கும் மரத்தில் கார்த்திகேயன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திகேயனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |