செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், புரட்சித்தலைவி அம்மா மீது திமுக அடுக்கடுக்கான பொய் வழக்குகள் போடப்பட்டது, அந்த தெய்வத்தாய் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தொண்டர்களையும் காப்பாற்றுவதற்காக தான் அந்த நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறினார். 24 பொய் வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டது.
அந்த பொய் வழக்கை எதிர்த்து ஒவ்வொரு நாளும் அவர் நீதிமன்றத்திற்கு சென்றார். எதற்காக, அவர் தன்னுடைய வாழ்வுக்காகவா, தன் பிள்ளைகள், குடும்பத்திற்காகவா ? சத்தியமாக இல்லை. இந்த தாய் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக.. ஒரு குடும்ப அரசியலில் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார். அந்தத் தியாகத்தின் உடைய அர்த்தம் என்ன ?
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் உலகம் போற்றுகின்ற உத்தம தலைவியாக இருந்த அம்மா அவர்கள் பழிவாங்கப்பட்டாரே… அந்தத் தியாகத்தின் உடைய விலை ? மதிப்பு என்ன ? அதனுடைய அளவுகோல் என்ன ? அதை தான் இன்றைக்கு தொண்டர்கள் கேட்கிறார்கள். அதுமட்டுமல்ல ரவீந்திரநாத் குமார் அவர்கள், அன்பு சகோதரர் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திமுகவின் உடைய முதலமைச்சரை சந்திக்கிறார்.
சந்தித்ததோடு மட்டுமல்லாமல் அது எதார்த்தமான சந்திப்பு அல்ல, அவர் சந்தித்து இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று வாழ்த்துகிறார். அதை நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் பொதுமேடையில் விவாதித்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை முடக்குகின்ற செயல் அல்லவா ? தொண்டர்களை தொய்வடைய, நம்பிக்கை இழக்க செய்கின்ற ஒரு செயலாகத்தான் இதை ஒன்றரை கோடி தொண்டர்களும் விவாதிக்கிறார்கள் என தெரிவித்தார்.