செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஒவ்வொருவருக்கும் உடலில் ஓடுகின்றது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ரத்தம். புரட்சித்தலைவர் தந்த சோறு, அம்மா அவர்கள் தந்த உணவை சாப்பிட்டு வளர்ந்தவர்கள் தான் இங்கே இருக்க கூடிய கோடானு கோடி தொண்டர்கள். ஒரு வலிமை உள்ள தலைமை வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது ?
ஒரு மன உறுதியோடு இருக்கின்ற நிலை தடுமாறாத, முடிவுகளை மாற்றி மாற்றி எடுத்து, சந்தேகத்திற்குரிய தலைமையாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கை உள்ள தலைமையாக, எங்கள் வாழ்வை அர்ப்பணிக்கின்ற ஒன்றரை கோடி தொண்டர்கள் வாழ்வைத் தங்களது வாழ்வை அர்ப்பணித்து இருக்கிறார்கள்.
தங்கள் உயிரை பணயம் வைத்து தான், கழகப் பணி மக்கள் பணியென அந்தந்த பகுதிகளில் ஆற்றி கொண்டிருக்கிறார்கள், ஏச்சுகளையும், பேச்சுகளையும், அத்தனையும் தாண்டித்தான் அவர்கள் தங்களை அர்ப்பணித்து கழகப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரை வழிநடத்துகின்ற தலைமை என்பது மன உறுதியோடு இருக்க வேண்டும், அதை தான் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த மன உறுதியோடு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சீர்திருத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
எத்தனைமுறை மூத்த தலைவர்கள் அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், நான் உட்பட அந்த பேச்சுவார்த்தையில் இருந்தேன். அவர் கட்சி நலனை முன்னிறுத்தி இருந்தால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அவர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை, ஆனால் வெளியே ஊடகங்களிலேயே பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஒரு அனுதாபத்தை தேடுகின்ற நிலையை பார்க்கிறோம். பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் அவர் விதிக்கவில்லை என தெரிவித்தார்.