தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சிவா “கணம்” படத்தில் வெளியான அம்மா பாடலை வெகுவாக பாராட்டியுள்ளார்.
நடிகர் சர்வானந்த் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் “கணம்” ஆகும். இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் ரீத்து வர்மா, அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். இப்படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இது தமிழில் “கணம்” என்றும் தெலுங்கில் “ஒகே ஒக ஜீவிதம்” என்றும் தயாராகிவருகிறது.
இத்திரைப்படத்தின் அம்மா பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடகர் சித் ஸ்ரீராம் குரலில் வெளிவந்த இப்பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்தது. இணையத்தில் பலரின் பாராட்டுகளை பெற்ற இந்தப்பாடலை இயக்குனர் சிவா பாராட்டி செய்தி அனுப்பியிருக்கிறார். இதைப்பற்றி ஜாக்ஸ் பிஜாய் அவரின் ட்விட்டர் பக்கத்தில் “கணம்” படத்தினுடைய அம்மா பாடல் வெளியாகியதிலிருந்து எனக்கு அதிக பாராட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் உச்சநிலையாக இயக்குனர் சிவா அவர்களின் பாராட்டு செய்தி அமைத்திருக்கிறது என பதிவிட்டுள்ளார். இயக்குனர் சிவா முன்னணி நடிகர்களை வைத்து சிறுத்தை, வீரம், விசுவாசம், அண்ணாத்த போன்ற பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.