தனுஷின் அம்மா பிறந்த நாள் புகைப்படத்தில் தனுஷ் இல்லாமல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனமாடுவது பாடல் பாடுவது என தனக்குள் பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார். அண்மையில் தனது மனைவியான இயக்குனர் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள். இதனால் தனுஷின் சகோதரிகள் அம்மா வீட்டிற்கு வந்து அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய இருக்கின்றனர். கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தை தனுஷின் சகோதரியான விமலா தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் கஸ்தூரிராஜா, அவரின் மனைவி, செல்வராகவன், அவரின் மனைவி உள்ளிட்டோர் இருக்கின்றார்கள். ஆனால் அதில் தனுஷ் மட்டும் இல்லை. விமலா போட்டோவை பகிர்ந்து தனுஷை மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் தனுஷ் எங்கே என கேட்டு வருகின்றார்கள். தனுஷ் தற்போது வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது.