Categories
மாநில செய்திகள்

அம்மா மினி கிளினிக்கில் வேலை பார்த்த மருத்துவர்களுக்கு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஒமிக்ரான் வைரசால் பெரிய பாதிப்புகள் இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். 2 முறை கொரோனா பரிசோதனையின்போது நெகடிவ் ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம். சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் இருக்கிறது. இங்கு கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஆலோசனை வழங்குவதற்கு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை, செங்கல்பட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன. ஆகவே அம்மா மினிகிளினிக்கில் வேலை பார்த்த 1,800 டாக்டர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகளும் மூட சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள வேப்பேரி பெரியார் திடலில் கொரோனா சித்த மருத்துவம் சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. 1820 மருத்துவர்கள் தற்போது கொரோனா பணிக்கு ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் 22 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் 3.35 லட்சம் சிறார்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Categories

Tech |