பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் மளிகை கடை உரிமையாளரான மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கீதா குடும்பத்துடன் தனது தாய் வீட்டிற்கு செல்வதற்கு விரும்பியுள்ளார். ஆனால் அதிகமாக வேலை இருப்பதாக கூறி மஞ்சுநாத் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கீதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.